Skip to main content
திட்ட உதவிகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு நலதிட்ட உதவிகள்

தூத்துக்குடி மாவட்டம் வ.உ.சி. கல்லூரியில் இந்தியன் ஆயில் காப்பிடு  ரேசன் லிமிடெட் தமிழ்நாடு மாநில அலுவலகம் சென்னை மற்றும் மத்திய அரசின் சமூக நீதி மற்றும் பாதுகாப்பு துறையின் கீழ் இயங்கும் அலிம்கோ நிறுவனம் இணைந்து சமூக பொறுப்புணர்வு நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் கலந்துகொண்டு 478 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.35.82 இலட்சம் மதிப்பில் உதவி உபகரணங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் பேசியதாவது:-

தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு நலன் கருதி மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், மாற்றுத்திறனாளிகள் தங்களது பணிகளை மற்றவர்கள் உதவியின்றி தாமே மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், தூத்துக்குடி மாவட்டத்திலும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகைகள், மூன்று சக்கர நாற்காலி, காதொலி கருவி, கண் கண்ணாடி உள்ளிட்ட உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆணடு; 192 மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர நாற்காலியும், ஏழை பெண்களுக்கு திருமண நிதி உதவி வழங்கும் திட்டத்தின்கீழ் 43 மாற்றுத்திறனாளிகளுககு; ரூ.14.25 இலட்சம் மதிப்பிலும், சுயதொழில் துவங்க 17 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2.55 இலட்சம் கடன் உதவிகளும் வழங்கப்பட்டது. மேலும் நமது மாவட்டத்தில் சமூக பொறுப்புணர்வு நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இன்று இந்தியன் ஆயில் கார்பரேசன் லிமிடெட் மற்றும் அலிம்கோ நிறுவனம் இணைந்து சமூக பொறுப்புணர்வு நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் 478 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.35.82 இலட்சம் மதிப்பில் உதவி உபகரணங்களை வழங்கப்படுகிறது. மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும்முதியவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு எளிதாக வந்து செல்ல ஏதுவாக சமூக பொறுப்புணர்வு நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் பேட்டரி மூலம் இயங்கும் வாகன வசதி செய்யப்பட்டுள்ளது. வேலைக்கு செல்லும் மகளிர்களுக்கு ரூ.25 ஆயிரம் அல்லது 50 சதவீதம் மானியத்தில் அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம் தமிழக அரசால் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. பணிக்கு செல்லும் பெண் மாற்றுத்திறனாளிகளாக இருந்தால் ரூ.37,500- மானியம் வழங்கப்படுகிறது. நமது மாவட்டத்தில் சமூக பொறுப்புணர்வு நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் 13 மாற்றுத்திறனாளி பெண்களுக்கு ரூ.6.87 இலட்சம் மதிப்பில் அம்மா இருசக்கர வாகனம் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் இணைக்காத 18 வயது பூர்த்தியடைந்த இளம் வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவம் - ஐ பூர்த்தி செய்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும். நமது மாவட்டத்தில் 35,000 மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். இதில் 18 வயது பூர்த்தியடைந்த சுமார் 15,000 மாற்றுத்திறனாளிகள் வாக்காளர் பட்டியலில் கண்டறியப்பட்டுள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரத்துடன் வாக்காளர் ஒப்புகை சீட்டு இயந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது. இதில் வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அவாக் ளே தெரிந்துகொள்ளும் வகையில் வாக்காளர் ஒப்புகை சீட்டு இயந்திரம் மூலம் 7 விநாடிகள் திரையில் தெரியும் வகையில் வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. பார்வையற்றவாக் ள் வாக்களிக்க ஏதுவாக பிரெய்லி மூலம் வடிவமைகக் ப்பட்ட வாக்கு சீட்டு வழங்கப்பட உள்ளது. மேலும், ஒரு வாக்குச்சாவடி பகுதியில் அதிகமான மாற்றுத்திறனாளிகள் இருந்தால் வாக்குப்பதிவு நாளன்று அவர்கள் வாகனத்தின் மூலம் வாக்குச்சாவடி மையங்களுக்கு அழைத்து சென்று மீண்டும் இருப்பிடத்திற்கே கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். எனவே வாக்காளர்கள் எதிர்வரும் தேர்தலில் 100 சதவதீ ம் வாக்குப்பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் பேசினார். நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் (பயிற்சி) மரு.அனு, இ.ஆ.ப., முதன்மை கல்வி அலுவலர் திரு.முருகேசன், அலிம்கோ துணை மேலாளர் (பெங்களுரு) திரு.அ.சிவக்குமார் இந்தியன் ஆயில் கார்பரேசன் லிமிடெட் தலைமை விற்பனை மேலாளர் திரு.ஏ.ஆர்.சிவக்குமார், இந்தியன் ஆயில் கார்பரேசன் லிமிடெட் தலைமை மேலாளர் திரு.பி.கைலேஷக்காகாந்த் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Add new comment

Plain text

  • No HTML tags allowed.
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.