Skip to main content
முகிலன்

முகிலன் எங்கே? நாம் தமிழர் கட்சியினர் தூத்துக்குடியில் போராட்டம்

சூழலியல், மனித உரிமை போராளி முகிலன் எங்கே? தூத்துக்குடியில் நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்

முகிலன்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான தகவல்களை வெளியிட்ட சூழலியல், மனித உரிமைப் போராளி முகிலன் காணாமல்போயிருக்கும் சம்பவம், சமூகப் போராளிகள் விஷயத்தில் அரசு இயந்திரம் நடந்துகொள்ளும் முறை குறித்த கேள்விகளை எழுப்பியிருக்கிறது. முகிலன்

பிப்ரவரி 15-ல் தூத்துக்குடி படுகொலை தொடர்பான காணொளியை வெளியிட்ட அவரை, அன்று இரவு முதல் காணவில்லை. துப்பாக்கிச்சூடு சம்பவத்துடன் தொடர்புடைய காவல் துறையினரைப் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல்கள் அந்தக் காணொளியில் இருக்கும் நிலையில், அவர் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற அச்சம் பல்வேறு தரப்பினராலும் எழுப்பப்படுகிறது.முகிலன்

பல்வேறு அமைப்பினரும் சூழலியர் முகிலனை கண்டுபிடித்து மக்கள் முன் நிறுத்துமாறு கோரிக்கை வைத்துள்ள நிலையில் தூத்துக்குடியில்  நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்தை முன்னேடுத்துள்ளனர்  பல்வேறு அமைப்பிபினரும் ஆதரவு தெரிவித்து தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.முகிலன்

சமூக ஊடகங்களில் ‘முகிலன் எங்கே?’ என்று எழுந்த கேள்வி இன்றைக்குத் தமிழகத்தின் பிரதானக் கட்சிகள், அமைப்புகள் வரை எதிரொலிக்கிறது. முகிலனைக் கண்டுபிடித்து மக்கள் முன் நிறுத்த வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் கோரியிருக்கிறார்கள்.

Add new comment

Plain text

  • No HTML tags allowed.
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.