Skip to main content
ஸ்டெர்லைட் வழக்கு

ஸ்டெர்லைட்டுக்கு எதிராக நாம் தமிழர் கட்சியினர் மனு

ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட சிறப்புச் சட்டம் இயற்ற கோரி நாம் தமிழர் கட்சியினர் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்:

மண்டல செயலாளர் செ.இசக்கி துரை தலமையில் மனு அளிக்கப்பட்டது

மனுவில் : தூத்துக்குடியின் நீர்வளத்தையும் நில வளத்தையும் நாசமாக்கி மக்களை புற்று நோயால் சாகடித்த ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து மக்கள் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். ஆலைக்கு எதிராக போராடி 16க்கும் மேற்பட்டவர் உயிரிழந்துள்ளனர்.

தூத்துக்குடி மக்களின் போராட்டத்திற்கு பிறகு ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்பட்டது.

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட பிறகு தூத்துக்குடியில் காற்றின் தரம் 35% உயர்ந்துள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை அளித்துள்ளது.

தற்போது ஸ்டெர்லைட் ஆலையால் பாதிப்பு இல்லை ஆலையை திறக்கலாம் என்ற பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவு தூத்துக்குடி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை எற்படுத்தியுள்ளது.

சிறப்புச் சட்டம் இயற்றி ஸ்டெர்லைட் ஆலையை உடனே தூத்துக்குடி மண்ணில் இருந்து வெளியேற்ற வேண்டும். தூத்துக்குடி மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து ஆலை உடனே வெளியேற்றப்பட வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆட்சியரிடம் முறையிடு :

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்த காவல் துறை அனுமதி வழங்குவதில்லை. 5 பேருக்கு மேல் கூடினாலே கைது செய்து விடுகின்றனர்.

ஸ்டெர்லைட் ஆலை பணம் கொடுத்து வெளி ஊரில் இருந்து ஆதரவாக ஆட்களை அழைத்து வருகின்றனர் அவர்களுக்கு அனுமதி வழங்கப்படுவதாக 

ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக தூத்துக்குடி மக்கள் யாரும் வரவில்லைலை தூத்துக்குடி முழுவதும் ஸ்டெர்லைட் ஆலைக்குகு எதிராக உள்ளது என்று முறையிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்

Add new comment

Plain text

  • No HTML tags allowed.
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.