Skip to main content
முகாம்

தூத்துக்குடி கோவில்பட்டி கழுகுமலை பகுதிகளில் சாலை அமைக்கும் பணி தொடக்கம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம், வில்லிசேரி ஊராட்சி, கே.சுப்பிரமணியபுரம் ஊராட்சி மற்றும் கழுகுமலை பேரூராட்சியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா மற்றும் திறப்பு விழா மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நேற்று நடைபெற்றது.முகாம்

.தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம், வில்லிசேரி ஊராட்சியில் ரூ.65.80 இலட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணிகளுக்கும், கழுகுமலை பேரூராட்சியில் ரூ.18 இலட்சம் மதிப்பில் மினி பவர் பம்ப் மற்றும் சின்டெக்ஸ் அமைக்கும் பணி, நியாய விலைக்கடை ஆகிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், வள்ளிநாயகிபுரத்தில் ரூ.7.70 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டியை மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர்.செ.ராஜூ அவர்கள் திறந்து வைத்தார்கள்.

Add new comment

Plain text

  • No HTML tags allowed.
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.