Skip to main content
தீர்மானம்

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முடியாது சட்டபேரவையில் முதல்வர் அறிவிப்பு

யார் நினைத்தாலும் ஸ்டெர்லைட் தொழிற்சாலையை திறக்க முடியாது.!

தூத்துக்குடியிலுள்ள மூடப்பட்ட ஸ்டெர்லைட் தொழிற்சாலையை யார் திறக்க வேண்டுமென நினைத்தாலும் அந்த எண்ணம் ஈடேறாது என சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார் முதல்வர் பழனிசாமி.

மக்கள் போராட்டத்தால் மூடப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலையை மீண்டும் திறக்க வேண்டுமென்ற தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவு குறித்து எதிர்க்கட்சிகளால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த முதல்வர் பழனிசாமி, "ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும் என்ற நிலைப்பாட்டில் தமிழக அரசு உள்ளது. தொழிற்சாலைகளுக்கென்று தனிச்சட்டம் உள்ளது. அதை மீறி செயல்பட்ட காரணத்தினால் தான் மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டது. எந்த காலத்திலும் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்க தமிழக அரசு உதவாது" என உறுதியளித்தார்.

Add new comment

Plain text

  • No HTML tags allowed.
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.