Skip to main content
சீட்டு

தேர்தலில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்து கொள்ள ஒப்புகை சிட்டு ஒத்திகை

தூத்துக்குடி மாவடட் ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று (07.02.2019) நாடாளுமன்ற பொதுத் தேர்தல் - 2019 வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வாக்கு ஓப்புகை சீட்டு வழங்கும் இயந்திரம்செயல்பாடுகள் குறித்து விழிப்புணர்வு பயிற்சி பொதுமக்களுக்கு அளிக்கும் வகையில் அலுவலர்களுக்கான பயிற்சியை மாவட்ட வருவாய் அலுவலர் மரு.மு.வீரப்பன் அவர்கள் தொடங்கி வைத்தார்.சீட்டு

கூட்டத்தில் மாவடட் வருவாய் அலுவலர் அவர்கள் பேசியதாவது:- நாடாளுமன்ற பொதுத் தேர்தல் 2019 சில வாரங்களில் அறிவிக்கப்பட உள்ளது. இத்தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரத்துடன் அனைத்து தொகுதிகளில் யாருக்கு வாக்காளித்தோம் என்பதை வாக்காளர் அறிந்து கொள்ளும் வகையில் வாக்கு ஒப்புகை சீட்டு எந்திரம் பயண்படுத்தப்படவுள்ளது. உலகில் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் மிகப்பெரிய அளவிலான தேர்தல் இதுவாகும். எனவே பொதுமக்கள் வாக்கு ஒப்புகை சீட்டு வழங்கும் எந்திரத்தினை பற்றி முழுமையாக அறிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும். பொது மக்கள் அதிகமான அளவில் கூடும் பகுதிகள், வாக்குச் சாவடி அமைந்துள்ள பகுதிகள் உள்ளிட்ட முக்கிய பகுதிகள் நடத்திட வேண்டும். இதில் அரசியல் கட்சியினரையும் பங்கேற்குமாறு அழைக்கலாம். வாக்காளர் விழிப்புணர்வு பணியின்போது வாக்களிப்பவரின் பெயர், முகவரி கையெழுத்துடன் பதிவேட்டில் பதிவு செய்திட வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்திட வட்டாச்சியர் , துணை வட்டாச்சியர், வருவாய் ஆய்வாளர் கிராம நிர்வாக அலுவலர் ஆகிய நிலைகளில் 60 நபர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படுகிறது. நீங்கள் உங்கள் பகுதியில் உள்ள மற்ற அலுவலர்களுக்கும் பயிற்சி வழங்கி நமது மாவட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வாக்கு பதிவு ஒப்புகை சீட்டு இயந்திரம் தொடர்பாக பொது மக்களுக்கு சந்தேகமின்றி விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும் என தெரிவித்தார். தொடர்ந்து வட்டாட்சியர்கள் திரு.முருகானந்தம் மற்றும் திரு.ஜான்சன் தேவசகாயம் ஆகியோர் அலுவலர்களுக்கு பயிற்சி அளித்தார்கள். இக்கூட்டத்தில் தூத்துக்குடி சார் ஆட்சியர் திரு.சிம்ரான் ஜீத் சிங் கலோன், இ.ஆ.ப., வருவாய் கோட்டாட்சியர்கள் திருமதி.விஜயா, திரு.கோவிந்தராசு, தேர்தல் வட்டாட்சியர் திரு.நாகராஜன் மற்றும் வட்டாட்சியர்கள், அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Add new comment

Plain text

  • No HTML tags allowed.
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.